How to maintain disc brakes in a bike? | மோட்டார் பைக் டிஸ்க் பிரேக் பாதுகாப்பது எப்படி?
Bike Disc Brakes Maintain
Bike இல் மிக முக்கியமான ஒன்று brakes, இந்த பதிவில் Disc Brakes எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முழுமையாக காண்போம்.
Bike Disc Brakes Maintain, நாம் பைக் ஓட்டிட்டு செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால், நாம் கீழே விழுந்து விடுவோம் நமக்கும் நம் bike க்கும் அடிபட்டு விடும். Brake முக்கியம். நீங்கள் எங்கேயாவது ஊருக்கோ அல்லது சுற்றுலாவுக்கும் பைக்கில் செல்லும் போது பிரேக் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொண்டு செல்லுங்கள்.
Brake பிடிக்காமல் நிறைய நபர்கள் பைக்கில் இருந்து கீழே விழுகிறார்கள். இதையெல்லாம் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் பைக்கில் செல்லும் பொழுது மெதுவாக செல்லுங்கள்.
Disc brake பாதுகாக்கும் முறை
1. நாம் bike water wash செய்வதற்காக கடையில் விடுவோம். Wash செய்தபிறகு bike புதியது போல் தெரிவதற்கு அவர்கள் பயன்படுத்துவது Cutting oil இந்த oil bike மீது அடிக்கும் போது Disc மீது oil படும். அப்பொழுது brake பிடித்தால் brake சரியாக பிடிக்காது. இதை சரிசெய்ய துணியை எடுத்துக் கொள்ளுங்கள். Disc மீது துணியை வைத்து நன்கு துடைக்கவும். Disc இல் இருக்கும் oil துணியில் ஒட்டிக்கொள்ளும். பிறகு உப்புகாகிதம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உப்புகாகிதம் Electric கடைகளில் கிடைக்கும். இதன் விலை ₹10 ஆகும். அந்த உப்புகாகிதம் சிறியதாக கிழித்துக் கொண்டு Disc மீது நன்கு தேய்க்கவும். தேய்த்த பிறகு Disc இல் சிறிய அளவில் Scratch ஏற்பட்டு இருக்கும். Scratch இருந்தால் தான் நீங்கள் நன்கு தேய்த்து உள்ளீர்கள் என்று அர்த்தம்.
2. பிறகு disc brake பிடித்துப் பார்த்தால் நன்கு Brake பிடிக்கும். Water wash செய்யும் போது ஒவ்வொரு முறையும் இப்படி செய்யுங்கள் Disc Brake அருமையாக பிடிக்கும்.
3. மழை காலங்களில் அதிகமாக பைக்கை சேருகளில் ஓட்டாதீர்கள். ஏனென்றால் சேருகள் அனைத்தும் Disc இல் ஒட்டிக்கொள்ளும் பிறகு Disc Brake பிடிக்காது. Disc brake இல் துணி வைத்து அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
4. Disc fluid வருடத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பைக்கில் இரண்டு வகை Disc Fluid உள்ளது அவை, Dot 4 - Dot 3 இந்த இரண்டு வகைதான் பைக்கில் உள்ளது. உங்கள் பைக்கில் எந்த fluid பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த fluid மட்டும் பயன்படுத்துங்கள். வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக Disc Fluid மாற்றிக் கொள்ள வேண்டும்.
5. நீண்டகாலமாக disc fluid மாற்றாமல் இருந்தால் fluid தன்மை இயந்து கட்டி போயிடும். பிறகு brake பிடிக்காது. Caliper இல் உள்ள O ring கூட வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் தான் Disc Brake சரியாக வேலை செய்யும். இதையெல்லாம் சரிபார்த்து கொள்ளுங்கள் நன்றி.